பார் எதிரில் இளைஞன் கொலை : குற்றவாளி கைது

மண்டியா : ஜூலை. 30 – ஸ்ரீரங்கப்பட்டினத்தின் பெலகோலாவில் பார் எதிரில் தகாத உறவு விஷயமாக பார் ஊழியன் ஒருவனை கொலை செய்த குற்றவாளியை கே ஆர் எஸ் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீரங்கபட்டனா தாலூகாவின் பெலகோலாவில் உள்ள பார் எதிரில் பார் ஊழியன் ரவி என்பவனை கொலை செய்த குற்றவாளி ஷரத் என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையுண்ட ரவி குற்றவாளியின் மாமியாருடன் தப்பான உறவு வைத்திருந்துள்ளான். இந்த காரணத்திற்க்காக ஆத்திரமடைந்த ஷரத் பேச்சு கொடுக்கும் சாக்கில் ரவியிடம் வந்து பின்னர் அரிவாளால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளான் . இந்த சம்பவத்தில் கழுத்து மற்றும் தலையில் தீவிர காயமடைந்த ரவி இறந்து போனான். இந்த கொலை சம்மந்தமாக ஷரத்தை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர்.
இதே போல் பால் வாங்க சென்றிருந்த பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை செய்த குற்றவாளியை மைசூர் மாவட்ட காலந்தே போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 23 அன்று காலை மினுக்கம்மா (45) என்பவர் பால் வாங்க சென்றிருந்த போது அவரை தாக்கிய ஒருவன் அவரை அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருந்தான். நஞ்சன்கூடு தாலூகா ஹளேபுரா கிரமத்தில் நடந்த இந்த விவகாரத்தை ஆய்வு செய்த போலீசார் அதே கிராமத்தை சேர்ந்த மஹாதேவநாயகா என்ற கொலையாளியை கைது செய்துள்ளனர்.