பாலக்கோட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி – ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை


பாலக்கோடு, ஏப்.8-
பாலக்கோட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு தினமும் 100 டன் அளவுக்கு தக்காளி வரத்து உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. பாலக்கோடு பகுதியில் தக்காளி விளைச்சல் தற்போது அதிகரித்துள்ளதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ ரூ.5 விற்பனையாகிறது. 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.75-க்கு விற்பனையாகிறது. தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.