பால் டேங்கர் லாரிகள் மூலம் பெங்களூரில் குடிநீர் விநியோகம்

பெங்களூர் மார்ச் 5
பெங்களூரில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சரிப்படுத்த பால் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய அரசு முடிவு செய்து இருப்பதாக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்
கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்வது தொடர்பாக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் பெங்களூரில் நிலவும் குடிநீர் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று விவாதிக்கப்பட்டது. பின்னர் டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூர் மாநகராட்சி பகுதியில் 14 ஆயிரத்து 781 ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அவற்றில் 6,997 ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. தண்ணீர் என்பது யாருடைய சொத்தும் இல்லை. இது அரசின் சொத்து. எனவே பாசன மற்றும் தனியார் போர்வெல்களில் தண்ணீர் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்வோம். இதற்காக போர்வெல் உரிமையாளர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்படும். மேலும் நகரில் புதியதாக ஆழ்துளை கிணறுகளும் தோண்டப்படும்.
காவிரி 5-ம் கட்ட திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மே மாதம் இறுதிக்குள் பெங்களூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள 110 கிராமங்களுக்கு காவிரி கு வழங்கப்படும். 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைப்பதில் சிறிய பிரச்சினை உள்ளது. அந்த இடத்தை பார்வையிட்டு பிரச்சினைகளை சரிசெய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை வியாழக்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அதிகாரிகள் பதிவு செய்யாத தண்ணீர் டேங்கர் லாரிகளை பறிமுதல் செய்வார்கள்.
தற்போது கர்நாடகாவில் பால் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் சில பால் டேங்கர்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே அவற்றை சுத்தம் செய்து பெங்களூரு அந்த வாகனங்களில் பெங்களூர் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். தண்ணீர் என்பது யாருடைய சொத்தும் இல்லை, அது அரசின் சொத்து. எனவே, பாசனம் மற்றும் தனியார் போர்வெல்களில் தண்ணீர் தேவைப்பட்டால் எடுத்துச் செல்வோம். போர்வெல் உரிமையாளர்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்கு அரசு ஓரளவு இழப்பீடு வழங்கும். மேலும் நகரில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படும் என்றார். தற்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கும், டிரில்லர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் பேசி, பிரச்னைக்கு தீர்வு காண்பேன். இன்னும் சில நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும், என்றார்.சிவகுமார் மேலும் கூறுகையில், காவிரி 5 ஆம் கட்டத் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது, மே மாத இறுதிக்குள் பிபிஎம்பி அதிகார வரம்பிற்குட்பட்ட 110 கிராமங்களுக்கு காவிரி நீர் வழங்கப்படும். 2 கி.மீ.க்கு பைப்லைன் அமைப்பதில் சிறிய பிரச்னை உள்ளது. இடத்தை பார்வையிட்டு, பிரச்னைகளை சரி செய்து, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.தனியார் தண்ணீர் டேங்கர்களின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை வியாழக்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். பதிவு செய்யப்படாத டேங்கர்களை போலீசார் மற்றும் ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். நகரத்தில் 3,000 க்கும் மேற்பட்ட டேங்கர்கள் உள்ளன. மேலும் 219 மட்டுமே பிடபிள்யூஎஸ்எஸ்பியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வியாழன் அன்று தண்ணீர் டேங்கர் ஆபரேட்டர்கள் சங்கத்துடன் கூட்டத்தை நடத்தி, நீர் ஆதாரத்துக்கும், விநியோகிக்கும் இடத்துக்கும் இடையே உள்ள தூரத்தின் அடிப்படையில் டேங்கர்களுக்கான விலையை நிர்ணயம் செய்வதாகவும் துணை முதல்வர் கூறினார்.