பால் தயிர் விலை ரூ.2 உயர்வு

பெங்களூர் : நவம்பர். 23 – நந்தினி பால் மற்றும் தயிர்களின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் ஏற்றும் முடிவை கர்நாடகா பால் உற்பத்தி மஹா மண்டலி ( கே எம் எப் ) முடிவு செய்திருப்பதுடன் இந்த புதிய விலையற்றத்தை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியிருப்பதுடன் அரசு இதற்க்கு ஒப்புதல் அளித்த பின்னர் பால் மற்றும் தயிர் விலை உயரவுகள் நடைமுறைக்கு வர உள்ளன. கே எம் எப் நிறுவனம் கடந்த நவம்பர் 14 அன்று பால் மற்றும் தயிரின் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்த முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த விலையேற்றத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை ஒப்புக்கொள்ளாததால் விலையேற்றம் நடைமுறை படுத்தப்பட வில்லை. நவம்பர் 21 அன்று (அதாவது நேற்று முன் தினம் ) முதல்வர் பசவராஜ் பொம்மை கே எம் எப் தலைவர் பாலச்சந்தர ஜாரகிஹோலியுடன் ஆலோசனை நடத்தி லிட்டருக்கு பால் மற்றும் தயிர் விலைகளை மூன்று ரூபாய்க்கு உயர்த்துவது வேண்டாம் . வாடிக்கையாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை மனதிற்கொண்டு விலையேற்றம் குறித்து அனைத்து பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களுடன் ஆலோசித்து முடிவு செய்யுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார். அதன்படி இன்று கே எம் எப் தலைவர்பாலச்சந்திர ஜாரகிஹோலி தலைமையில் கூட்டம் நடந்துள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பால் மற்றும் தயிர் ஆகிவற்றின் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தும் முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பாலின் விலையேற்றம் குறித்து கே எம் எப் புதிய அறிவிப்பை அரசுக்கு அனுப்பியிருப்பதுடன் முதல்வரின் ஒப்புதலுக்கு பின்னர் பாலின் விலை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் முதலே பால் மற்றும் தயிர் விலை உயர்வுகள் நடைமுறையாக உள்ள நிலையில் ஏற்கெனவே அத்யாவசிய பொருள்களின் விலையேற்றங்களால் தத்தளித்து கொண்டிருக்கும் சாமான்ய மக்களுக்கு இந்த விலையேற்றம் மேலும் சுமையாக உள்ளது. பாலின் ஒவ்வொரு லிட்டருக்கும் இரண்டு ரூபாய் விலையேற்றப்பட்டால் நந்தினி சாமான்ய பால் (நீல நிற பாக்கட் ) லிட்டருக்கு 37 ரூபாயிலிருந்து 39 ரூபாய்க்கு உயர்த்தப்படும். இதே வேளையில் ஸ்பெஷல் பால் லிட்டருக்கு 43 லிருந்து 45 ரூபாய்க்கு உயர்த்தபப்டும் தவிர ஸம்ருத்தி பாலின் விலை லிட்டருக்கு 48லிருந்து 50 ரூபாய்க்கு உயர்த்தப்படும் வாய்ப்புகள் உள்ளது.