தீபாவளிக்கு பெங்களூரில் கடந்த ஆண்டை விட மாசு குறைவு

பெங்களூரு, நவ.16- கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, 3 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களின் போது காற்றின் தரக் குறியீடு அதிகரிததது. பண்டிகைக்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது காற்று மாசுபாடு அதிகரித்த போதிலும், நிலைமை முந்தைய ஆண்டு பண்டிகை காலத்தை விட மாசு குறைந்துள்ளது. கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பெங்களூரில் உள்ள 11 நிலையங்கள் உட்பட 39 நிலையங்களுக்கு நவம்பர் 12, 13, 14 தேதிகளில் சராசரியாக மாசுவின் அளவு வெளியிட்டது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுவப்பட்ட தரநிலைகளின்படி, 50க்குக் குறைவாக மாசு இருந்தால் 50-100 நல்லது, திருப்திகரமானது. 101-200 மிதமானது மற்றும் 201-300 மோசமானது எனக் குறிக்கும். பெங்களூரில், மூன்று நிலையங்கள் ‘மோசமான’ காற்றின் தரத்தை பதிவு செய்தன. ஜெயநகர் 234 என பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பட்டு வாரியம் 224 மற்றும் கவிகா 212 குறியீடு உள்ளது.
மங்களூரு, பீத‌ர், தும்கூரு, கார்வார், தாவண‌கரே, ராய்ச்சூர், ராமநகர், ஹுப்பள்ளி, ஹாவேரி, சிக்கபள்ளாப்பூர், யாதகிர், கோலார் உள்ளிட்ட 19 நிலையங்களும், பெங்களூரில் உள்ள ஏழு நிலையங்களும் மிதமான காற்றின் தரத்தை பதிவு செய்துள்ளன. ராமநகர், ஹூப்பள்ளி மற்றும் தார்வாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாசு அளவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இருமடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைசூரு, மடிகேரி, ஹாசன், கலபுர்கி, சாமராஜ்நகர், பாகல்கோட், விஜயபுரா, சிக்கமகளூரு மற்றும் பிற 17 நிலையங்களில் காற்றின் மாசு திருப்திகரமாக உள்ளது. பெங்களூரில் உள்ள சனேகுருவனஹள்ளி மட்டுமே 94 என உள்ளது
மாசுவைக் குறைக்க பட்டாசுகள் பற்றிய விழிப்புணர்வு தேவை என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய‌ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பசுமை பட்டாசுகளின் அறிமுகம் செய்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒப்பிடும்போது மாசு ஓரளவு குறைத்துள்ளது. பெங்களூரு போன்ற நகரங்களில் உண்மையான மாசு அளவுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அதிக பகுதிகளில் கண்காணிப்பு தேவைப்படுகிறது என்றார்.