பிஎப்ஐ மீது என்ஐஏ சோதனை

பெங்களூர் : நவம்பர். 5 –
மங்களூர் , மைசூர் ,மற்றும் ஹூப்ளி உட்பட மாநிலத்தில் பலபகுதிகளில் ஒரே நேரத்தில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா ( பி எப் ஐ ) பிரமுகர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகம அதிகாரிகள் மீண்டும் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் உப்பினங்கடி , சுல்யா, மைசூர் , ஹூப்ளி உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் பி எஸ் ஐ பிரமுகர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்தி அங்கு கிடைத்துள்ள ஆவணங்களை பரிசீலனை செய்து வருகின்றனர். தவிர இந்த சோதனைகளின் போது சில பி எப் ஐ பிரமுகர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு தற்போது தலைமறைவாயுள்ள சில பி எப் ஐ பிரமுகர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பி ஜே பி இளம் பிரமுகர் பிரவீன் நெட்டாரு கொலை விவகாரம் தொடர்பாக தலைமறைவாயுள்ள மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் புத்தூரின் சுற்றுப்பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமம் சோதனைகள் மேற்கொண்டுவருகிறது . புத்தூர் , பெல்லாரே , சுல்யா ஆகிய இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் ஆறு குழுக்களாக சோதனைகள் நடத்தி பொதுமக்களிடம் இருந்தும் தகவல்கள் சேகரித்து வருகின்றனர். நான்கு குற்றவாளிகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் மொத்தம் 14 லட்சம் வெகுமதி அளிப்பதாக அதிகாரிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இரண்டு குற்றவாளிகள் குறித்து தகவல்கள் அளித்தால் 5 லட்சம் ரூபாய்கள் மற்றும் மேலும் இருவர் குறித்து தகவல்கள் அளித்தால் 2 லட்ச ருபாய் வெகுமதி அளிப்பதாக என் ஐ ஏ பொது அறிவிப்பு பிறப்பித்துள்ளது . முஹம்மத் முஸ்தபா மற்றும் துபைல் ஆகிய இருவர் பற்றி தகவல் அளித்தால் 5 லட்ச ரூபாய் ரொக்க பரிசு மற்றும் மேலும் இரண்டு குற்றவாளிகளான உமர் பாரூக் மற்றும் அபூபக்கர் சித்திக் ஆகியோர் குறித்து தகவல் அளித்தால் 2 லட்ச ரூபாய் ரொக்க பரிசு அளிப்பதாக என் ஐ ஏ தன அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக மேலும் மூன்று குற்றவாளிகளை என் ஐ ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.