பெங்களூர், செப். 7-
பி எம் டி சி பஸ்சின் சிசிடிவி கேமரா உதவியுடன் பெங்களூரில் வடக்கு பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் நகர போலீசார் துரிதமாக கண்டுபிடித்தனர். பெங்களூர் பட்டேலப்பா லேஅவுட் டில் வீடு புகுந்து பொருட்களை திருடியதாக 28 வயது சுப்ரதோ மண்டல் என்பவரை போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட பொருட்களில் 10. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் 75,000 ரொக்கம் இருந்தது .
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுப்ரதோ மண்டல் பெங்களூர் மத்தி கெரேயில் உள்ள முத்தியாலா நகரில் சிறிது காலம் வசித்து வந்துள்ளார். இவர் டாலர்ஸ் காலனி, சஞ்சய் நகர் பகுதிகளில் நடமாடி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 27ல் பார்த்தபோது அவர் படேலப்பா பாளையத்தில் உள்ள ஒரு வீட்டை திருடுவதற்கு குறி வைத்து சரியான தருணத்திற்காக காத்திருந்தார். மதியம் 12 :45 மணிக்கு அந்த வீட்டில் இருந்து பெண் ஒருவர் வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.இதனை கவனித்த மண்டல் பூட்டை உடைத்து வீட்டில் புகுந்து திருடி உள்ளார். வீட்டுக்கு திரும்பி வந்த பெண் தனது வீட்டில் திருடிச் சென்று இருப்பதை கவனித்து அதிர்ச்சி அடைந்தார். போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்த துவங்கினார்கள் அங்கு பக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை கவனித்துள்ளனர். ஆனால்
அதில் முகம் தெளிவாக தெரியவில்லை அந்த நபர் பஸ் நிலையம் சென்றுள்ளார். பஸ் நிலையத்தில் பஸ் ஏறி சென்றிருக்கிறார். இந்த காட்சி பஸ்ஸில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
அதனை கவனித்து எங்கு இறங்கினார் அங்கிருந்து எங்கே சென்றார் என்ற காட்சிகள் மூலம் திருடனை போலீசார் பிடித்தனர். அவர் வசம் இருந்த ரொக்க பணம் வகைகளை பறிமுதல் செய்தனர் என்று
டிசிபி சிவபிரகாஷ் தேவராஜ் தெரிவித்துள்ளார்.