பிஎம்டிசி பயிற்சி ஊழியர்கள் 96 பேர் பணி நீக்கம்


பெங்களூர்.ஏப்.8
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட பிஎம்டிசி பயிற்சி ஊழியர்கள் 96 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
1400 க்கும் மேற்பட்ட பயிற்சி ஊழியர்கள் நாளை முதல் கட்டாயம் பணியில் கலந்து கொள்ள வேண்டும். என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
போக்குவரத்து நிறுவனங்களின் விதிகளின்படி, பயிற்சி ஊழியர்கள் எந்தவொரு வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது. மேலும் சரியான காரணமின்றி பணிக்கு விடுப்பு போடக்கூடாது.
வேலைநிறுத்தம் வரை போக்குவரத்து பயிற்சி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். பயிற்சியில் உள்ள 1,400 ஊழியர்களில் முதலாவது பணிநீக்கம் செய்யப்படுவார். பின்னர் அதன் பிறகும் வேலைக்கு வராமல் இருந்தால் மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுவர் என்று போக்குவரத்து துறை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.