பிஎம்டிசி பஸ் மோதி பள்ளி சிறுமி பலி

பெங்களூரு, ஆகஸ்ட் 16-
மோட்டார் சைக்கிள் மீது பிஎம்டிசி பேருந்து மோதியதில் நான்கரை வயது பள்ளி சிறுமி உயிரிழந்த நெஞ்சை உருக்கும் சம்பவம். நடந்துள்ளது.பெங்களூரு இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் ப்ரீ-கேஜி படிப்பவர் பூர்விராவ். இவரது
தந்தை பிரசன் தனது மகள் பூர்வியை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றபோது வேகமாக வந்த பேருந்து பைக் மீது மோதியது. பூர்வி வலது பக்கம் விழுந்ததில் பிஎம்டிசி பேருந்து அவர் மீது ஏறியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தந்தை பிரசன்னா தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பிரசன்னா தனது மகளை தினமும் பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல் இன்றும தனது மகளை பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
பிஎம்டிசி பஸ் டிரைவர் பசவராஜ் பூஜாரி கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.