பிஎம்டிசி பஸ் மோதி பெண் சாவு

பெங்களூர் : டிசம்பர். 14 – வேகமாக வந்த பி எம் டி சி பேரூந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் வாகனத்தில் இருந்த மனைவி அதே இடத்தில் இறந்துள்ள நிலையில் கணவன் மற்றும் மகள் உயிர் பிழைத்துள்ள சம்பவம் சில்க் போர்ட் அருகில் மடிவாளா மேம்பால வீதியில் நடந்துள்ளது. பேரூந்து சக்கரம் எறியதில் சீமா (21) என்பவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை சில்க் போர்ட் அருகில் மடிவாளா மேம்பாலத்தில்இந்த விபத்து நடந்துள்ளது. பேரூந்து ஓட்டுனரின் அஜாக்ரதையால் இந்த விபத்து நடந்துள்ளது. சீமா மற்றும் அவருடைய கணவன் குருமூர்த்தி தங்கள் இரண்டரை வயது மகளுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது பக்கத்தில் வந்த பி எம் டி சி பேரூந்து இவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் மூவரும் கீழே விழுந்த nilaiyil சீமா மீது பேரூந்தின் பின் சக்கரம் எறியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக கணவன் குருமூர்த்தி மற்றும் மகள் உயிர்பிழைத்துள்ளனர். குருமூர்த்தி சிங்காசந்திராவில் மின்சாரத்துறையில் பணியாற்றிவருகிறார்.