பிஎஸ்ஐ மோசடி குறித்து எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது : பாஸ்கர் ராவ்

பெங்களூர் : ஜூலை. 26 – மாநிலத்தில் நடந்துள்ள பி எஸ் ஐ நியமன மோசடிகள் குறித்து தனக்கு முன்னரே தெரியும் என நகர போலீஸ் ஆணையராக இருந்த ஆம் ஆத்மி கட்சி பிரமுகர் பாஸ்கர் ராவ் இன்று தெரிவித்துள்ளார். உடுப்பியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பி எஸ் ஐ நியமன ஊழல்கள் குறித்து எனக்கு முன்னரே வாசனை தெரியவந்தது. தவிர இது குறித்து கேள்விகளும் கேட்டுள்ளேன். நான் போலீஸ் ஆணையாயிருந்தபோது அம்ருத் பவுல் அடுத்த நகர ஆணையராக வருவார் என்ற தகவல்கள் இருந்தது. அடிக்கடி முதல்வர் வீட்டுக்கு வரும் போதிலும் கேள்விகள் எழுப்பியுள்ளேன். இது மோசடி என எனக்குத்தெரியம் என்று கூறிய முதல்வர் மாநில ஆளுநரிடம் கொண்டு சென்று முதல் கட்டமாக சென்றதுடன்இந்த விவகாரத்தை முதலில்வெளிப்படுத்தியவர்கள் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். தவிர ஆளுநர் வரையில் இந்த விஷயத்தை கொண்டு சென்றவர்களும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களே என அவர்கள் தெரிவித்துள்ளனர் . இன்னும் விசாரணை நடத்தும் வரையில் தேர்வுகள் நடத்த மாட்டோம் என்பது தவறான கருத்து. நீங்கள் இளம் சமுதாயத்தினருக்கு மோசடி செய்துள்ளீர். மொத்த தேர்வையும் ரத்து செய்து புதிதாக தேர்வுகளை நடத்துங்கள் என்று கோரியுள்ள போலீஸ் ஆணையர் , சி ஐ டி க்குள் சென்றுவிட்ட பின்னர் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் ஆய்வு அதிகரிகளாகின்றனர். இது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என நான் முதலே அரசை வற்புறுத்தியுள்ளேன் . நீதிமன்ற விசாரணை துவங்கிய 24 மணி நேரத்திற்குள் அம்ருத பவுல் கைது செய்யப்பட்டுள்ளார். என நகர் போலீஸ்ஆணையர் தெரிவித்தார்.