பிஎஸ்ஐ வழக்கில் அதிரடி திருப்பம்

கல்புர்கி, ஜன.24-
கர்நாடக மாநிலத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி பாட்டில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் இந்த முறைகேடு வழக்கை மூடி மறைக்க வழக்கை முடித்துக் கொள்ள ஒரு 3 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறியுள்ளார். போலீஸ் டிஎஸ்பி சங்கர் கவுடா தன்னிடம் பணம் கேட்டதாகவும் அதற்கான தொலைபேசி உரையாடல் தன்னிடம் ஆதாரமாக இருப்பதாகவும் இந்த வீடியோவில் இவர் கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது
சப் இன்ஸ்பெக்டர் தேர்வு லஞ்ச முறைகேட்டை மூடி மறைக்க மறைக்க மீண்டும் லஞ்சமா என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிஎஸ்ஐ முறைகேடு தேர்வு தொடர்பான மோசடியில் முக்கிய குற்றவாளியான ஆர்.டி. பாட்டீல் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் மீதான வழக்கை முடித்து வைக்க டிஎஸ்பி சங்கர் கவுடா பாட்டீல் ரூ.3 கோடி கேட்டார் என்று இவர் கூறி இருப்பதால் வழக்கு முழுவதும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ள சங்கர் கவுடா பாட்டீல் ரூ.3 கோடி கேட்டார் ஏற்கனவே ரூ.76 லட்சம் கொடுத்துள்ளேன். மீதி தொகையை தராததால், சிஐடி போலீசார் என்னை மீண்டும் கைது செய்து பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர் என பிஎஸ்ஐ முறைகேட்டில் முக்கிய குற்றவாளியான ஆர்.டி. பாட்டீல் வீடியோ செய்தியில் ஒரு புதிய குண்டை வீசினார்.
நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன் இதுபற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாட்டீல், நான் சங்கர் கவுடா பாட்டீலிடம் பேசிய ஆடியோ ஒன்று உள்ளது. எனவே, கர்நாடக லோக்ஆயுக்தா, சிஐடி ஏடிஜிபி, நகர போலீஸ் கமிஷனர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அலோக்குமார், கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா ஆகியோரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளேன். பதிவு தபால் மூலம் புகார் அளித்துள்ளேன் என்றார்.
சிஐடி புலனாய்வாளர்கள் என்னிடம் மட்டுமல்ல, பிஎஸ்ஐ மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமும் பணம் பெற்றுள்ளனர். ஆனால், அவர் புகார் அளிக்க முன்வரவில்லை. சட்டப் போராட்டம் எனக்கு தவிர்க்க முடியாதது. எனவே இது குறித்து புகார் அளித்துள்ளேன் என்றார்.
545 பி.எஸ்.ஐ., பணியிடங்களுக்கு சட்ட விரோதமாக தேர்வு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, முக்கிய குற்றவாளியான ஆர்.டி., சி.ஐ.டி., போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடினார். பாட்டீல் நகரின் 5வது ஜேஎம்எஃப்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.