பிக் பாஸ் புகழ்நடிகை சோனு கைது

பெங்களூரு, மார்ச்.22-
சட்டவிரோதமாக குழந்தையை வீட்டில் வைத்திருந்ததாக பிக்பாஸ் புகழ் சோனு ஸ்ரீனிவாச கவுடாவை பேடரஹள்ளி போலீசார் கைது செய்தனர். சோனு சீனிவாச கவுடாவை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சோனு கவுடா ஒரு குழந்தையை தத்தெடுத்ததற்காக சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டார் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட கர்நாடகாவை சேர்ந்த 8 வயது சிறுமியை தத்தெடுத்ததாக கூறிய சோனு இதன் மூலம் அனுதாபம் பெற முயற்சி இருப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது
தத்தெடுப்பு பற்றிய தகவல்களை பொதுவில் பகிர முடியாது. ஆனால் அந்த வீடியோவில் சிறுமியின் தகவல்களை பகிர்ந்ததற்காக சோனு கவுடாவை ஜேஜே சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களாக சோனு கவுடா என்பவர் வீட்டில் செவந்தி என்ற பெண்ணுக்கு சாப்பாடு ஊட்டுவது, போன்றவற்றை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்திருந்தார்.
வீட்டை சுற்றியிருந்த நாய்களுக்கு பிஸ்கட் கொடுக்கும் போது சிறுமியை சந்தித்ததாக சோனு கூறியிருந்தார். மூலம் கூறியிருந்தார்.
குழந்தை தத்தெடுப்பு தொடர்பாக சோனு கவுடா மீது குழந்தைகள் நலத் துறை படாரஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.