பிஜேபிக்கு மனசாட்சி இல்லை குமாரசாமி கடும் விமர்சனம்

பெங்களூர் : நவம்பர் . 14 – மாநிலம் முழுக்க சாலை குண்டு குழிகளின் மீது செல்வந்த கோபுரங்கள் கட்டும் பி ஜே பி கட்சிக்கு மனசாட்சி என்பதே இல்லை என மாநில முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி இன்று கடுகடுப்பாக கூறியுள்ளார். சாலை குண்டுகுழிகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டேஇருப்பது மிகவும் கவலைக்கிடமானது என குமாரசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர் ட்வீட் செய்துள்ள குமாரசாமி மண்டியாவில் ஓய்வு பெற்ற முதியவர் ஒருவர் இந்த சாலை குழிகளுக்கு பலியாகியிருப்பது மிகவும் சோகத்தை தந்துள்ளது. மாநிலத்தின் சீரிழந்துள்ள வீதிகளுக்கு விமோசனமே இல்லையா என்றும் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மண்டியாவில் ஓய்வு பெற்ற வயது முதிர்ந்த ஒருவர் சாலை குழிக்குள் விழுந்து லாரியின் சக்கரங்களில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து அனுதாபம் தெரிவித்துள்ள குமாரசாமி அரசுக்கு எதிராக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ராணுவத்திலிருந்து சமீபத்திலதான் ஓய்வு பெற்றிருந்த குமார் என்ற ராணுவ வீரர் மண்டியாவின் காரிமனே கேட் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலை குழிக்குள் விழுந்த உடனேயே அவர் மீது லாரி ஒன்று எறியதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இதுவே மாநிலத்தின் சீரற்ற நிர்வாகத்துக்கு கைக்கண்ணாடி எனவும் ஹெச் டி குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.