பிஜேபிக்கு 8 மடங்கு அதிக நிதி

டெல்லி, பிப். 15- 2022-23 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தம் ரூ.680.49 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளன.
ரூ.980.49 கோடியில் 90 சதவீதம் அதாவது ரூ.610.49 கோடி பா.ஜ.க.வுக்கு சென்றுள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.55.62 கோடி நன்கொடை வழங்கியுள்ளன. 2021-22 நிதியாண்டில் பா.ஜ.க. ரூ.614.62 கோடி நன்கொடை பெற்ற நிலையில் 2022-23 நிதியாண்டில் அதிக நன்கொடை. காங்கிரஸ் கட்சிக்கு 2021-22-ல் ரூ.95.45 கோடி நிதி கிடைத்த நிலையில் 2022-23-ல் ரூ.79.92 கோடி மட்டுமே நன்கொடை 2022-23-ல் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த நன்கொடைகளில் 80.1 சதவீதம் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கியவை ஆகும்.
பா.ஜ.க.வை தவிர எஞ்சிய அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த நன்கொடை ரூ.70 கோடி. மற்ற கட்சிகளை காட்டிலும் பா.ஜ.க.வுக்கு கிடைத்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடை 8 மடங்கு அதிகம்.