பிஜேபியுடன் கூட்டணியை முறித்தது அதிமுக

சென்னை செப்டம்பர் 25
பிஜேபியுடன் கூட்டணி இல்லை இன்றைக்கும் இல்லை என்றைக்கும் இல்லை என்று அதிமுக இன்று மாலை அதிரடியாக அறிவித்தது. பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் அதிமுக பிஜேபி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில் சமீப காலமாக இந்த இரு கட்சிகளுக்கும் மோதல் நிலவி வந்தது குறிப்பாக அதிமுக தலைவர்கள் குறித்தும் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்தும் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இழிவாக பேசி வருவதாக அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் டெல்லி சென்று பிஜேபி மேலிட தலைவர்களை சந்தித்து புகார் கொடுத்தனர். தமிழகத்தில் அண்ணாமலை அதிமுக பிஜேபி கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேசி வருவதாகவும் அவரை மாற்ற வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு பிஜேபி மேலிடம் செவி சாய்க்கவில்லை என்று தெரிகிறது. எந்த நிலையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பிஜேபி கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கட்சியின் இரண்டு கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிஜேபி உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு இந்த தகவலை கே.பி. முனுசாமி தெரிவித்தார் பிஜேபியுடன் கூட்டணி முடித்துக் கொள்ளப்பட்ட தகவல் அறிந்து அதிமுக தொடர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமுடன் கொண்டாடினர். இதற்கு இடையே அதிமுகவின் எக்ஸ் பக்கத்தில் பிஜேபி உடனான கூட்டணி முடிவு குறித்து நன்றி மீண்டும் வர வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது நன்றி மீண்டும் வர வேண்டாம் என்ற வாசகத்தை அதிமுகவினர் ஹெஷ்டாக்கில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். அதிமுக பிஜேபி கூட்டணி முடிவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை தேசிய தலைமை இது தொடர்பாக உரிய முடிவை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்