பிஜேபியை விட்டு யாரும் விலக மாட்டார்கள்

பெங்களூர், நவ.20- கர்நாடக மாநில பிஜேபியின் எந்த அதிருப்தியும் இல்லை கட்சியை விட்டு தலைவர்கள் யாரும் விலகப் போவது இல்லை மற்ற கட்சிகளில் இருந்து தான் பிஜேபிக்கு வர தயாராக உள்ளனர் என்று கர்நாடக மாநில பிஜேபி புதிய தலைவர் விஜயேந்திரா இன்று மைசூரில் கூறினார் மைசூருவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மாநிலத் தலைவர் என்ற முறையில் அனைத்துத் தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்று ஒன்று படுத்துவேன். கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் அது ஜனநாயகம் ஆனால் அதற்காக யாரும் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள்.
பாஜக மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை கவரும் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், பாஜகவில் இருந்து யாரும் காங்கிரஸுக்கு செல்லவில்லை என்றார். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு வருவார்கள் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் மூத்தவர்கள் பசன் கவுடா பாட்டீல் யத்னால் மற்றும் ஜாரகிஹோலி ஆகியோர் தங்கள் கருத்தை தெரிவித்தனர். அதில் தவறில்லை என்றார்.
பசனா கவுடா பாட்டீல் யட்னல், ஜாரகிஹோலி மூத்தவர்கள். அவர்களை சந்தித்து பேசுவேன். அவர்களை நம்பிக்கையுடன் அணுகி செயல்படுவேன். கட்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். சிறிய வேறுபாடுகள் இருக்கலாம். அடுத்த சில நாட்களில் அனைத்தும் சரி செய்யும் பணி நடைபெறும் என்றார்.வரும் நாட்களில் பா.ஜ.,வில் அதிருப்தி வெடிக்கும் என காங்கிரஸ் தலைவர் கூறியதற்கு பதிலளித்த அவர், லோக்சபா தேர்தலுக்கு பின் எந்த கட்சியில் அதிருப்தி வெடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
சித்தராமையாவை காங்கிரஸில் இருந்து எவ்வளவு விரைவில் அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவில் முதலமைச்சர் ஆகலாம் என்று டி கே சிவகுமார் நினைக்கிறார். ஆனால் டி கே சிவக்குமாரை அப்புறப்படுத்த என்ன செய்யலாம் என்று சித்தராமையா யோசித்து வருகிறார். அது அவர்கள் பிரச்சனை அது எங்களுக்கு தேவையில்லை. இந்த காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடியை பிரதமர் ஆக்குவது தான் எமது முதல் கடமை என்றார்
கர்நாடகா பாஜகவின் கோட்டையாக இருந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் தோற்றது உண்மைதான். இதை மனதில் வைத்து, வரும் நாட்களில், மாநிலத்தில் கட்சியை ஒருங்கிணைத்து, கர்நாடகாவை மீண்டும் பா.ஜ.,வின் கோட்டையாக மாற்றுவதே எனது நோக்கம், என்றார். லோக்சபா தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். அதேபோல், வரும் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொண்டு, கட்சியின் வெற்றிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார். அடுத்த சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பழைய மைசூரில் கட்சியை பலப்படுத்த வேண்டும். எனவே பழைய மைசூர் மண்டலத்தில் கட்சி அமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். தொடக்கத்தில் இருந்தே பழைய மைசூர் மாவட்டத்துடன் எனக்கு பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது என்றார் விஜயேந்திரர்.