பிஜேபி ஆட்சி 8 ஆண்டு நிறைவு மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பு

சிம்லா, மே. 31 – பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நேற்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனை முன்னிட்டு மே 30ந்தேதி முதல் ஜூன் 14ந்தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நடத்த அக்கட்சி திட்டமிட்டு உள்ளது. பிரதமர் தலைமையிலான அரசின் எட்டு ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் இந்தப் புதுமையான பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகர்கள், மாவட்ட தலைமையிடங்கள், விவசாய அறிவியல் மையங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரூ.21,000 கோடி மதிப்பிலான நிதிப் பலன்களைப் பெறுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்தின் சிம்லாவிற்கு இன்று செல்கிறார். அவர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இருந்து அனைத்து முதல்-மந்திரிகளுடனும் காணொலி காட்சி வழியே உரையாட உள்ளார். மேலும் பிரதமரின் விவசாய கவுரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ், 11-வது தவணை நிதிப்பயனையும் பிரதமர் வெளியிடுவார்.