பிஜேபி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்

பெங்களூர் பிப்.28-
கர்நாடக சட்டமன்றமான விதான சகோதரர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கம் எழுதிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக மாநில பிஜேபி எம்எல்ஏக்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் இருந்து விதான சவுதா வரை இவர்கள் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். அப்போது கர்நாடக மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் வெற்றி குறித்து அறிவித்த நேரத்தில் அவரது வெற்றி கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு இருப்பது மிகப்பெரிய தேச விரோதம் செயல் ஆகும். இந்திய திருநாட்டில் இருந்து கொண்டு இப்படி பாகிஸ்தான் வாழ்க என்று கோஷமிட்ட நபரை உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர்வலத்தில் வந்த பிஜேபி எம்எல்ஏக்கள் ஆவேசமுடன் கூறினார். கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர் அசோக் தலைமையில் பிஜேபி எம்எல்ஏக்கள் தேசியக் கொடிகளை ஏந்தி ஊர்வலமாக வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்