பிஜேபி எம்எல்ஏவின் தகாத வார்த்தைகள் வைரல்

பெங்களூர் : செப்டம்பர். 3 – தன் குறையை தெரிவிக்க வந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ள பி ஜே பி எம் எல் ஏ அரவிந்த் லிம்பாவலி நடத்தைக்கு காங்கிரஸ் உட்பட பல பகுதிகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நான் பெண் என்பதற்கு மரியாதை கொடுங்கள் என்று பெண்மணி கேட்டுக்கொண்டும் ஆக்ரமிப்பு செய்து கொண்டுள்ளாயா , ஏய் உனக்கு ஏன் மரியாதை கொடுக்க வேண்டும் என எம் எல் ஏ பேசியுள்ளது சமூக வலை தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பெண்மணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைக்கு உட்படுத்தி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளனர். அரசாங்க பணியில் தடை செய்ததாக பெண்மணி மீது வழக்கு பதிவாகியுள்ளது. பெங்களூரு நீர் விநியோகம் மற்றும் கழிவு நீர் பராமரிப்பு வாரியம் சட்ட விரோதமாக அமைத்த வர்த்தக கட்டிடத்தின் சுற்றுச்சுவரை தரைமட்டமாக்கியுள்ளது.