பிஜேபி எம்எல்ஏவுக்கு வழங்கப்பட்டு முன்ஜாமினை எதிர்க்கும் மனு மீது விசாரணை

புது டெல்லி : மார்ச். 15 – பி ஜே பி எம் எல் ஏ விரூபாக்ஷப்பாவுக்கு மாநில உயர்நீதி மன்றம் அளித்த முன்ஜாமீனை எதிர்த்து மாநில லோகாயக்தா தாக்கல் செய்துள்ள மனுமீது இன்று விசாரணை நடத்த நேற்று உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது . கரநாடகா சோப் அண்ட் டிடெர்ஜென்ட் நிறுவன குத்தகை ஊழலில் முக்கிய குற்றவாளியாக விரூபாக்ஷப்பா சேர்க்கப்பட்டுள்ளார் . இந்த மனுவை அவசர கதியில் விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு முன்னர் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது . அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த வழக்கை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தலைமையிலான அமர்வுக்கு அனுப்புமாறு லோகாயுக்தா வழக்கறிஞரிடம் தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்து கொள்ள லோகாயுக்தா வற்புறுத்திய நிலையில் தலைமை நீதிபதி அமர்வு வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தது வருவதால் இந்த வழக்கு விசாரணை நடத்த முடியாது என தெரிவித்தார். தற்போது இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எதுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது. இதற்கு முன்னர் இந்த வழக்கை ஏன் அவ்வளவு அவசரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வினவியபோது இது தற்போதைய எம் எல் ஏ குறித்த வழக்கு என்பதுடன் இதில் பெருமளவிலான பணம் குற்றவாளியிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக லோகாயுக்தா தெரிவித்தது . இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கௌல் தமைமையிலான அமர்வு இன்று இந்த வழக்கை விசாரிக்க உள்ளது . விரூபாக்ஷயாவின் மகனும் பெங்களூர் குடிநீர் வாரிய தலைமை கணக்காளருமான பிரஷாந்த் மண்டல் தன்னுடைய தந்தை சார்பாக 40 லட்ச ரூபாய் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக கடந்த மார்ச் 2 அன்று லோகாயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இது குறித்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் விரூபாக்ஷயாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது. 5 லட்ச பத்திர உறுதியுடன் முன்ஜாமீன் அளிக்கப்பட்டபோது விரூபாக்ஷப்பா விசாரணைக்கு நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் ஆஜராக வேண்டும் என்றும் நிபப்தனை விதித்திருந்தது. தவிர இவர் எந்த சாட்சியையும் அழிக்க முயற்சிக்கக்கூடாது என்றும் தெரிவித்து வழக்கு விசாரணையை மார்ச் 17க்கு ஒத்தி வைத்தது. கே எஸ் டி எள் நிறுவனத்திற்கு ரசாயனங்கள் சப்ளை செய்ய 81 லட்சம் லஞ்சம் கோரப்பட்டிருந்தது . மண்டல் கைதான் உடனேயே மண்டலின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் மேற்கொண்ட லோகாயுக்தா போலீசார் 8,23 கோடி ரொக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.