பிஜேபி எம்எல்ஏ விரைவில் கைது

ஷிமோகா, மார்ச் 6-
லோக்ஆயுக்தா சோதனைக்கு பிறகு தலைமறைவாக உள்ள எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பா விரைவில் கைது செய்யப்படுவார் என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
ஷிமோகாவின் தீர்த்தஹள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லோக் ஆயுக்தாவுக்கு நமது காவல் துறை நல்ல அதிகாரிகளை வழங்கியுள்ளது. லோக்ஆயுக்தாவில் எமது அரசு தலையிடவில்லை. அதனால் சன்னகிரி எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பாவின் மகன் கைது செய்யப்பட்டார். விரைவில் விருபாக்சப்பா கைது செய்யப்படுவார் என்றார்.
அரசு தலையிட்டிருந்தால் அவரது மகனை கைது செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். தந்தையாக இருந்தாலும் சரி, மகனாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். நாங்கள் ஊழலற்றவர்கள். இந்நிலையில் யாருக்கு எதிராக காங்கிரஸ் பந்த் நடத்தப்போவதாக கேள்வி எழுப்பினார்.
ஊழலின் தாயாக மாறியவர்கள் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் ஊழலுக்காக பல நாட்கள் சிறையில் இருந்தனர். இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். அப்படிப்பட்டவர்கள் இன்று ஊழலுக்கு எதிராக பந்த் என்று கூறுகிறார்கள் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என்று கிண்டல் செய்தார்.