பிஜேபி எம்எல்சி ராஜினாமா காங்கிரசில் சேர்ந்தார்

பெங்களூரு, மார்ச் 9-
கர்நாடக மேல் சபை உறுப்பினர் பதவி மற்றும் பிஜேபி முதன்மை உறுப்பினர் பதவியை புட்டண்ணா ராஜினாமா செய்துள்ளார்.
பின்னர், கர்நாடக காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிbதலைவர் டி.கே. சிவக்குமார் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார்.
பின்னர் பேசிய அவர் பிஜேபியில் தொடர்ந்து தன்னால் இருக்க முடியவில்லை என்றும் அந்த கட்சியை விட்டு விலகியது ஏன் என்று விளக்கம் அளித்தார்
20 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இதுபோன்ற ஊழலை பார்த்ததில்லை. பிஜேபி கட்சியில் சேர்ந்து நான் தவறு செய்துவிட்டேன் என்று என் மனசாட்சி சொல்லிக் கொண்டிருந்தது. கல்வித்துறையில் பணியாற்றிய நான் இன்று டி.கே.சிவக்குமார், சித்தராமையா, சுர்ஜேவாலா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தத்துவத்தில் நம்பிக்கை வைத்து இணைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

36 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். அரசின் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் சார்பில் போராடி வருகிறேன். சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதாகவும், சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியவில்லை என்றும் அவர் கூறினார்.