பிஜேபி எம்பிக்கள் உடன் மோடி ஆலோசனை

சென்னை, ஆக. 8- மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்குகிறது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவாதத்தின்போது மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்கள் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பாஜகவின் இரு அவைகளைச் சேர்ந்த எம்.பி.,க்களும் பங்கேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற உள்ள நிலையில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.