பிஜேபி கடும் விமர்சனம்

புதுடெல்லி:.டிச. 22-
மதுபான முறைகேடு, பிறரை கேலி செய்வது ஆகியவை மட்டுமே இந்தியா கூட்டணியை பெவிகால் போன்று இணைத்திருப்பதாக பாஜ தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பி.க்களின் போராட்டத்தின் போது திரிணாமுல் எம்பி. கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை போன்று நடித்து கிண்டலடித்தார். இது குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பாட்ரா கூறுகையில், “மதுபான முறைகேட்டில் தொடர்புடைய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை சம்மனை கண்டு ஓடி ஒளிகிறார்.
காங்கிரஸ் எம்பி. தீரஜ் பிரசாத் சாஹுவிடம் இருந்து ₹350 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எம்பி. ஒருவர் குடியரசு துணைத் தலைவரை கிண்டலடிக்கிறார். கடந்த காலங்களில் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் சனாதன தர்மத்தை அவமதித்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பேரணி நடத்துகின்றனர்.