பிஜேபி குறித்து சித்தராமையா கடும் விமர்சனம்

பெங்களூர்: ஆகஸ்ட். 5 – ஹிட்லரின் வழிகாட்டுதல் என்பதை விட்டு உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் , ஜனநாயகம் ஆகியவற்றை பின்பற்றினால் மட்டுமே தேசிய கொடியை உயரத்தில் ஏற்றுங்கள் என பிரதமர் கூறுவதற்கு தகுதி கிடைக்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா மத்திய அரசுக்கு எதிராக தன் கருத்தை தெரிவித்துள்ளார். நாடு முழுக்க தேசிய கொடிகளை ஏற்றும் உற்ச்சவத்தை நடத்த புறப்பட்டுள்ள பி ஜே பி மற்றும் ஆர் ஆர் எஸ்ஸுக்கு எவ்வித உரிமையும் இல்லை. மூவர்ண கொடி சுதந்திரம் , ஜனநாயகம் மற்றும் உண்மை உணர்வுகளை பிரதிபலிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தில் தொடர்ந்து வந்துள்ள அழகிய விஷயங்களை வெளிக்காட்டும் விதத்தில் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது நேருவின் கொள்கையாயிருந்துள்ளது . ஆனால் இப்போது பி ஜே பி இந்த கொடியை தங்கள் அரசியல் லாபங்களுக்கு எ பயன் படுத்துகிறது. என சித்தராமையா தெரிவித்துள்ளார்.