பிஜேபி ஜே டி எஸ் பிரமுகர்கள் காங்கிரசில் இணைந்தனர்

பெங்களூரு, ஆகஸ்ட் 21-யஷ்வந்த்பூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக தலைவர்கள் ராஜண்ணா, ஆர்யா ஸ்ரீனிவாஸ், சிவமடியா, ஹனுமந்தய்யா, சிக்கராஜு, ஜேடிஎஸ் தலைவர்கள் உமாசங்கர், ரகு, சதீஷ் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியில் இன்று கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவக்குமார் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் நசீர் உசேன், ஆனேகல் எம்.எல்.ஏ., சிவண்ணா, ஹோஸ்கோட் எம்.எல்.ஏ., சரத் பச்சேகவுடா, நெலமங்களா எம்.எல்.ஏ., ஸ்ரீநிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.