பிஜேபி தொடர்ந்த வழக்கில் சித்தராமையா நீதிமன்றத்தில் ஆஜர்

பெங்களூரு,  ஜூன் 1:
கர்நாடகா மாநிலம் உள்பட தேசிய அளவில் பொதுத் தேர்தல்-2024 நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களான டி.கே.சிவக்குமார், சித்தராமையா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மாநிலத்தில் 2019 முதல் 2023 வரை ஊழல் ஆட்சியை பாஜக அரசு வழங்கி உள்ளது என கூறினர்
அதாவது சி.எம். பதவி- ரூ.2500 கோடி, அமைச்சர் பதவி- ரூ. 500 கோடி பா.ஜ.க மேலிடம் கொடுத்து பதவியை வழங்கி உள்ளது. ஊழல் ஆட்சியை கொடுத்துள்ளது.
இது தவிர, கோவிட் கிட் டெண்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் 75%, பொதுப்பொது பணித்துறைஒப்பந்த டெண்டருக்கான ஒப்பந்தங்களில் 40%, மானியங்களுக்கான ஒப்பந்தங்களில் 30%, கருவிகள் வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் 40%, குழந்தைகளுக்கு முட்டை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தங்களின் 30% மற்றும் சாலைப் பணிகளின் டெண்டர் ஒப்பந்தங்களில் டெண்டர் எடுத்தவர்களிடமிருந்து 40% சதவீத கமிஷன் மற்றும் கொடுக்கப்பட்ட ஊழல் நிர்வாக புள்ளிவிவரங்கள் கர்நாடகத்தில் முக்கிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. இது தேர்தலின் போது பா.ஜ.க கட்சியை அவமதிக்கும் செயலாகும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் எஸ். கேசவ் பிரசாத் 42வது சிறப்பு நீதிமன்றத்தில் தேதி: 08.05.2023 அன்று தனிப்பட்ட புகார் ஒன்றை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக முதல்வர் சித்ராமையா இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.