பிஜேபி நிகழ்ச்சிக்கு வந்த முதியவர் மாரடைப்பால் சாவு

பெங்களூரு, செப்.10- இன்று பா.ஜ.க சார்பில்
தொட்டபல்லாப்பூரில் ஜனஸ்பந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 70 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார். தும்கூர் மாவட்டம், கொரட்டகெரே தாலுக்கா தொட்டிலகெரே கிராமத்தைச் சேர்ந்த சித்தலிங்கப்பா என்பவர் இறந்த முதியவர். தொட்டபல்லாப்பூரில் நடந்த ஜனஸ்பந்த மாநாட்டில் பங்கேற்றார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, உடனடியாக தொட்டபள்ளாப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொட்டபல்லாபூர் ஊரக காவல் நிலையத்திற்கு உட்பட்டது.
தொட்டபள்ளப்பூரில் நடைபெற்ற அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.