பிஜேபி பலம் அதிகரிப்பு

புதுடெல்லி, டிச-7-
3 மாநிலங்களில் பெற்ற வெற்றி பிஜேபியின் தனிப்பட்ட வெற்றி அல்ல அது கூட்டு முயற்சியால் பெறப்பட்ட வெற்றி என்றும் இதன் மூலம் நாடு தழுவிய அளவில் பிஜேபியின் பலம் அதிகரித்து இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றி தனிநபர் வெற்றியல்ல, கூட்டு வெற்றி என்று மோடி தெரிவித்தார். இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து என்னை மோடி ஜி ஆக்கி பொதுமக்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டாம் என்று கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்
பிஜேப, பார்லிமென்ட் குழு கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய அவர், ஆட்சிக்கு வந்த பின், பா.ஜ.,வின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஆட்சியைப் பிடிக்க முடியாத தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளதாகவும், வரும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற இது உதவும் என்றார்.
அனைத்துக் கட்சித் தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டிய பிரதமர், அனைத்துக் கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பின் பலனாக மூன்று மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்றும் கூறினார். டிசம்பர் 22 முதல் ஜனவரி 25 வரை நடைபெறும் விகாஸ் பாரத் சங்கல்ப யாத்திரையில் பங்கேற்க அனைத்து பாஜக எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.கூட்டத்திற்குப் பிறகு பிரதமரின் அறிக்கை குறித்துத் தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்திருப்பது கட்சியின் பலத்தை அதிகரித்திருப்பதாக பிரதமர் நம்புவதாகக் கூறினார்.
தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிச்சாங் புயலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதிக இடங்களை நாம் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மூன்று மாநிலங்களில் பி ஜே பி ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு அனைத்து தொண்டர்களின் உழைப்பும் முக்கிய காரணமாகும் . ஒவ்வொரு தொண்டனின் உழைப்பையும் தற்போது நினைவு கூறுகிறேன். அனைத்து பி ஜே பி எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் டிசம்பர் 22 முதல் ஜனவரி 25 வரை விகாஸ் பாரத் யாத்திரையில் பங்கு கொள்ள வேண்டும். என மோதி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற விவகார அமைச்சர் ப்ரஹலாத் ஜோஷி கூறுகையில் மூன்று மாநிலங்களில் பி ஜே பி ஆட்சிக்கு வந்திருப்பது கட்சி பலத்தை கூட்டியுள்ளது. தமிழ்நாடு , ஆந்திரா உட்பட தெலுங்கானா மாவட்டங்களில் மிச்சங்க் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பிரதமர் தீவிர வருத்தங்கள் தெரிவித்துள்ளார். இந்த மாநிலங்களுக்கு மத்தியில் இருந்து தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோதி தெரிவித்துள்ளதாக ப்ரஹலாத ஜோஷி தெரிவித்தார். இந்த புயலால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இறைவன் சக்தியை அளிக்கட்டும் என்றும் பிரதமர் மோதி வேண்டிகொண்டுள்ளார் .