பிஜேபி பிரமுகர் அனுஜ் சவுத்திரி சுட்டு கொலை

மொராதாபாத் : (உத்தரபிரதேசம் ): ஆகஸ்ட். 11 – சம்பாள் பகுதியின் பி ஜே பி தலைவர் அனுஜ் சவுத்திரி என்பவரை நகரின் அவருடைய வீட்டின் வெளியே நேற்று மாலை குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்ட கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். சம்பாள் பகுதியின் பி ஜே பி தலைவர் அனுஜ் சவுத்திரி நேற்று மாலை தன்னுடைய நண்பனுடன் தன்னுடைய அபார்ட்மென்டின் வெளிப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது காரில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியுள்ளனர் . தீவிர காயங்களடைந்த அனுஜ் சவுத்திரயை உடனே மொரதாபாத்தின் பிரைட் ஸ்டார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார் . ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். உள்ளூர் அரசியலில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தஅனுஜ் சவுத்திரிசம்பாளின் பிளாக் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர். இவரை கொலையாளிகள் காரில் வந்து சுட்ட காட்சிகள் அருகில் உள்ள சி சி டி வி காமிராக்களில் பதிவாகியுள்ளது. இது குறித்து மொராதாபாத் எஸ் எஸ் பி ஹேமராஜ் மீனா கூறுகையில் இரண்டு கட்சிகளுக்கிடையே பகைமை முதலே இருந்து வந்துள்ளது . இந்த கொலை தொடர்பாக நான்கு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது . குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன . குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.