பிஜேபி பிரமுகர் கைது

பெங்களூர் மே 10-
ஆத்திரமூட்டும் வீடியோ பதிவை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில், பிஜேபியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் மச்சகனூர் மீது போலீஸ் நிலையத்தில்புகார் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். வீடியோ பதிவை வெளியிட்ட குற்றசாட்டின் பேரில், பிரசாந்த் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆனால், தங்களுக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை சரிபார்த்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வீடியோ பிஜேபியின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிடப்பட்டது.
இதுகுறித்து அவரே எழுதி பலரைப் பற்றி தவறான தகவல் பரப்பிஎச்சரிக்கை எச்சரிக்கை என அவரே வீடியோவை வெளியிட்டுள்ளார்
சமூகத்தின் இரு பிரிவினிடையே பகை மற்றும் கருத்து வேறுபாடுகளை உருவாக்கும் நோக்கத்தில், இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதாக கர்நாடக மாநில காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் ரமேஷ் பாபு புகார் அளித்துள்ளார்.
பிஜேபி தேசிய தலைவர் ஜே .பி நட்டா., மாநிலத் தலைவர் பி .ஒய். விஜேந்திரா ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயேந்திரா மற்றும் பிஜேபியின் மூத்த வலைதள பொறுப்பாளர் அமீத் மாளவியா ஆகியோருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் வீடியோ பதிவை செய்தது யார் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.