பிஜேபி பிரமுகர் கொலை:எஸ்டிபிஐ தேசிய செயலாளர் வீட்டில் என்ஐஏ சோதனை

மங்களூர் : செப்டம்பர். 8 – பி ஜே பி இளம் பிரமுகர் பிரவீன் நெட்டாரு கொலை விஷயமாக இரண்டு நாட்களுக்கு முன்னர் புத்தூர் மற்றும் சுல்யா தாலூக்காலில் சோதனை நடத்தியுள்ள நிலையில் தேசிய புலனாய்வு பிரிவு ( என் ஐ ஏ ) குழுவினர் பண்ட்யாள் தாலூக்காவிலும் சோதனைகள் நடத்தி விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர் . பிரவீன் நெட்டாரு கொலை விவகார விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள என் ஐ ஏ அதிகாரிகள் எஸ் டி பி ஏ தேசிய செயலாளர் ரியாஸ் பரங்கிப்பேட் வீட்டில் சோதனைகள் நடத்தி பரிசீலனை மேற்கொண்டுள்ளனர். பண்ட்யாள் தாலூக்காவின் பி சி ரோடு அருகில் பர்லியா என்ற இடத்தில் உள்ள ரியாஸ் வீட்டின் கதவை தட்டிய என் டி ஏ அதிகாரிகள் ரியாஸின் மொபைல் போனை கைப்பற்றி வீட்டிலும் சோதனைகள் நடத்தியுள்ளனர். பிரவீன் நெட்டாரு கொலை விவகாரம் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்னர் புத்தூர் மற்றும் சுல்யா தாலூகாக்ளில் 32 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனைகளின் போது சாட்சிகளை சேகரித்துள்ளனர்.ரியாஸின் வீட்டில் சோதனை விஷயமாக உள்ளூர் எஸ் டி பி ஐ தொண்டர்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி திரும்பி செல்லுங்கள் என கோஷங்கள் எழுப்பினர். பி சி ரோடு அருகில் உள்ள பர்லியா என்ற இடத்தில் உள்ள ரியாஸின் வீட்டில் அதிகாரிகள் குழு சோதனைகள் நடத்துவதற்கு பண்ட்யாள் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். சுல்யா தாலுகாவில் ஜூலை 26 அன்று நடந்த பி ஜே பி தொண்டர் பிரவீன் நெட்டாரு கொலை மொத்த கடலோர மாவட்டங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பி ஜே பி மாநில தலைவரும் ஆகியுள்ள தக்ஷிண கன்னட மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் குமார் கடீல் , சுல்யா தாலூகாவின் எம் எல் ஏவான அமைச்சர் என் அங்காரா வுக்கு எதிராக தொண்டர்கள் தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மாநிலம் முழுக்க பாரதீய ஜனதா தொண்டர்கள் அரசை தாக்கியிருப்பதுடன் அரசின் கடுமையான நடவடிக்கை என்ற அறிக்கை குறித்தும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இளைய பிரிவின் பிரமுகர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.