பிஜேபி பிரமுகர் கொலை விவகாரம் ஐஎன்ஏ விசாரணை

பெங்களூர்: ஜூலை. 29 – தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் சுல்யா நகரில் நடந்த பி ஜே பி இளைஞர் பிரிவு தொண்டர் பிரவீன் நெட்டாரு கொலை விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமமிற்கு (என் ஐ எ ) மாற்றி கொடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிரவீன் குடும்ப உறுப்பினர்களை நேற்று சந்தித்து அனுதாபங்கள் தெரிவித்த முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த கொலை விவாகரத்தை என் ஐ எ விசாரணைக்கு உட்படுத்த முடிவு செய்துள்ளார். இது குறித்து தெரிவித்த முதல்வர் இந்த கொலை விசாரணையை தேசிய புலனாய்வு முகமத்திற்கு ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். பிரவீன் கொலை திட்டமிட்டு நடந்துள்ளது தவிர இது பல மாநிலங்களுக்குட்பட்டுள்ள விஷயமாக உள்ளது. இது குறித்து மாநில டி ஜி , ஐ ஜி , ஆகியோருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டிருப்பதுடன், இது குறித்துத்த தகவல்களை பெற்ற பின்னர் மாநில உள்துறை கடிதம் எழுத உள்ளது. கேரளா மாநில எல்லையில் இரண்டு மாநிலங்களும் ஒன்று சேரும் எல்லை பகுதிகளில் சி சி டி வி காமிராக்களை பயன்படுத்தி சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார் .