பிஜேபி 3வது வேட்பாளர் வெற்றி உறுதி

பெங்களூர்: ஜூன். 10 – மாநில சட்டசபையிலிருந்து ராஜ்யசபாவில் நான்கு இடங்களுக்கு நடந்த தேர்தலில் நான்காவது வேட்பாளராக யார் வெற்றி பெறுவார் என்பது பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது. மூன்று அரசியல் கட்சிகளுக்கிடையில் திறைமறைவில் நடந்துள்ள அரசியல் நடவடிக்கைகளை கவனிக்கும்போது பி ஜே பியின் மூன்றாவது வேட்பாளராக போட்டியிட்டுள்ள லெஹர் சிங்க் வெற்றிபெறுவது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. விதானசௌதாவின் முதல் மாடியில் உள்ள அறை எண் 101ல் ராஜ்யசபா தேர்தல் வாக்களிப்பிற்க்காக வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை ஒன்பது மணிக்கு வாக்களிப்பு நடவடிக்கை துவங்கிய உடனேயே ம ஜ தாவின் ரேவண்ணா முதல் வாக்கை செலுத்தினார். பின்னர் காங்கிரஸ் , ம ஜ தா மற்றும் பி ஜே பி எம் எல் ஏக்கள் ஒவ்வொருவராக வந்து வாக்களித்தனர். ராஜ்யசபாவின் நான்கு இடங்களுக்கு நடந்துள்ள தேர்தலில் பி ஜே பி சார்பாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் , நடிகர் ஜகஜேஷ் , காங்கிரஸ் சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் , ஆகியோரின் வெற்றி பெரும்பாலும் உறுதி. மற்றபடி நான்காவது இடத்திற்கு பி ஜே பியின் லெஹர் சிங்க் , காங்கிரசின் மன்சூர் அலி கான் , மற்றும் ம ஜ தாவின் குபேந்திர ரெட்டி ஆகியோர் களத்தில் இருப்பதுடன் இதில் காங்கிரஸ் மற்றும் ம ஜ தா கட்சிகளின் கூட்டணி பேச்சுக்கள் சுமுகமாகாத நிலையில் இரண்டு கட்சிகளுமே தங்கள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியிருப்பதால் பி ஜே பி யின் லேஹர் சிங்க் நான்காவது இடத்தில் வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் நான்காவது இடத்தில் வெற்றி பெரும் அளவிற்கு வாக்குகள் மூன்று கட்சிகளுக்கும் இல்லை. ஆனால் பி ஜே பிக்கு 90 இரண்டாவது முக்கியத்துவ வாக்குகள் கிடைக்க இருப்பதால் 32 முதல் முக்கியத்தவ வாக்குகளுடன் 90 இரண்டாவது முக்கியத்துவ வாக்குகளை பெற்று லெஹர் சிங்க் வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் வேட்பாளருக்கு 25 முதல் முக்கியத்துவ மற்றும் 45 இரண்டாவது முக்கியத்துவ வாக்குகள் உள்ளன. ம ஜ தாவிற்கு 32 முதல் முக்கியத்துவ வாக்குகள் உள்ளன. அந்த வகையில் பி ஜே பியின் லெஹர் சிங்க் வெற்றி பெரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த தேர்தலில் காங்கிரஸ் , பி ஜே பி மற்றும் ம ஜ தா கட்சிகள் மாற்றி வாக்குகள் அளிக்கதவாகையில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்திருப்பினும் ம ஜ தாவின் ஸ்ரீனிவாசகௌடா தான் காங்கிரசுக்கு வாக்களிப்பதாக கூறியுள்ளார் . அவர் ஒருவர் மட்டுமே குறுக்கு வாக்களிப்பு செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது. மற்றபடி ம ஜ தாவின் அதிருப்தி எம் எல் ஏக்களான சிவலிங்கேகௌடா , ஏ டி ராமசாமி , குப்பி ஸ்ரீனிவாஸ் , ஜி டி தேவேகௌடா ஆகியோர் ம ஜ தா கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருப்பதால் ம ஜ தாவின் அதிருப்தி எம் எல் ஏக்கள் குறுக்கு வாக்களிப்பார்கள் என நினைத்தது பொய்யாகியுள்ளது.