பிஜேபி 5வது வேட்பாளர் பட்டியல்

புதுடெல்லி, மார்ச் 25 மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் மேனகா காந்தி, கங்கனா ரணாவத் உட்பட 111 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்காக பாஜக இதுவரை 4 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 111 பேர் அடங்கிய 5-வது பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலகிய அபிஜித் கங்கோபாத்யாயா மேற்கு வங்க மாநிலம் தாம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார்.
நவீன் ஜிண்டால்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய தொழிலதிபர் நவீன் ஜிண்டால் நேற்று பாஜகவில் இணைந்தார். இவர் ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா தொகுதி யில் போட்டியிடுவார் என அறிவிக் கப்பட்டுள்ளது.