பிட்காயின் விவகாரம் மேலும் ஒருவர் கைது

பெங்களூர் மே 26-
யூனோ காயின் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சர்வரை கிளிக் செய்து 60.6 பிட்காயின் தற்போதைய சந்தை மதிப்பு 34 .84 கோடி. இதனை திருடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராபின் கண்டேன்வாலாவை எஸ்.ஐ.டி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராபின் கண்டேன் வாலா கரன்சி பரிமாற்றம் செய்யும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ராபின் ஆன்லைன் சர்வீஸ் என்ற பெயரில் நிறுவனமும் நடத்தி வந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீ கிருஷ்ணா என்கின்ற ஸ்ரீகி (29) என்ற சர்வதேச ஹேக்கர் பிட்காயின்களை பெற்று அவற்றை ரூபாய்க்கு மாற்றியதாக எஸ்ஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
2017 தும்கூரில் உள்ள யுனோ காயின் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சர்வர் ஹேக் செய்யப்பட்டு 60.62 பிட்காயின்கள் திருடப்பட்டன.
இதுகுறித்து நிறுவன இயக்குனர் ஹரிஷ் தும்கூர் புதிய விரிவாக்க போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் ஸ்ரீகியை சமீபத்தில் கைது செய்தனர்.விசாரணையில் திருடப்பட்ட சில பிட்காயின்கள் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகி மற்றும் ராபினுக்கு கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.ராஜஸ்தானில் பதுங்கி இருந்த ராபின் கைது செய்யப்பட்டு பெங்களூ ருக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீகியும் ராபினும் பல வருடங்களாக நண்பர்கள்.
ஸ்ரீக்கு கொடுத்த பிட்காயன்களை மாற்றிக் கொண்டிருந்த ராபின் ஹவாலா மூலம் பல்வேறு கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்து வந்தார்.
இதற்காக கமிஷன் பெற்று வந்தார். குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகிக்கு ராபின் மற்றும் பலர் ஒருங்கிணைந்து இந்த செயலை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதனால் அவர்கள் அனைவரும் மீதும் கோகா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என எஸ் ஐ டி வட்டாரங்கள் தெரிவித்தன.
ராபினை சிசிபி மற்றும் சிஐடி போலீசார் முன்பு கைது செய்தனர். ஸ்ரீகியும் ராபினும் பல கரன்சி எக்ஸ்சேஞ்ச் ஏஜென்சிகளின் சர்வார்களை ஹேக் செய்து பணம் சம்பாதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான ஆதாரங்கள் சேகரிப்பதற்காக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.