
பெங்களூர் : அக்டோபர் . 21 – பிட் காயின் சாக்கில் பணத்தை இரட்டிப்பு ஆக்குகிறோம் என கூறி பொதுமக்களிடமிருந்து லட்சக்கணகானான பணங்களை வசூலித்து மோசடி செய்துள்ள தந்தை மற்றும் மகனை சி சி பி போலீசார் கைது செய்துள்ளனர். தந்தை சதீஷ் மற்றும் மகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். . சதீஷ் காந்திபஜார் , அவென்யூ வீதி , பலேபெட் , மற்றும் பசவன்குடி உட்பட மொத்தம் 4 பகுதிகளில் உள்ள பஞ்ச ஐஸ்வர்யா கூட்டுறவு சங்கங்களின் பங்குதாரராக இருந்துள்ளனர் . பொதுமக்களிடமிருந்து உங்கள் பணத்தை இரட்டிப்பாக்குகிறோம் என நம்ப வைத்து பணங்களை பெற்று இவர்கள் இருவரும் லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2021 -2022ல் ஜி ஜி கெமிங்க் ஆப் தருவிப்போம் என நம்பவைத்த இவர்கள் இந்த ஆப் வாயிலாக பிட் காயின் ஆசையை மூட்டி நாளொன்றுக்கு 10 ஆயிரம் முதலீடு செய்தால் மாதத்திற்கு 45 ஆயிரம் லாபம் கிடைக்கும் என கூறி வந்துள்ளனர். தவிர ஸ்ரீகாந்த் பிரபல ஓட்டல் உரிமையாளர்களை அழைத்து மோசடி செய்து வந்துள்ளார். தவிர வங்கிகள் மோசடி தொடர்பாக மோசடிக்கு உட்பட்டவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துகொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு தந்தை மகன் இருவரையும் கைது செய்து 6 மடிக்கணினிகள் , 4 மொபைல் போன்கள் , 2 கம்பியூட்டர்கள் , மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த அக்டோபர் 5 அன்று பிட் காயின் குறித்த விசாரணையின் போது மிக பிரபல ரௌடியை கைது செய்வதில் எஸ் ஆய் டி அதிகாரிகள் வெற்றிபெற்றனர் . இந்த வழக்கில் ராஜேந்திரசிங்க் என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளி. இவன் அரசு மற்றும் தனியார் வெப் சைட்டுகளை ஹேக் செய்துவந்திருந்தான் . இந்த குற்றவாளியை கண்டுபிடிக்க கடந்த நான்கு வருடங்களாக மத்திய உளவுத்துறையினர் தேடி வந்திருந்த நிலையில் சி ஐ டி ஏ டி ஜி பி மணீஷ் தலைமையிலான குழுவினர் இப்போது இவனை கைது செய்துள்ளனர்.