பிட் புல் நாய் கடித்து சிறுமி படுகாயம்

பெங்களூர் : ஜனவரி. 24 – அபாயகரமான அமெரிக்க இனத்தை சேர்ந்த பிட் புல் இனத்தை சேர்ந்த வளர்ப்பு நாய் ஒன்று நான்கு வயது சிறுமியை கடித்ததில் சிறுமி படு காயங்கலடைந்துள்ள சம்பவம் சஞ்சய்நகரில் நடந்துள்ள நிலையில் iஇந்த தகவல் தாமதமாக தெரியவந்துள்ளது . கடந்த ஜனவரி 13 அன்று சஞ்சய்நகரில் இந்த நாய் சிறுமியை கடித்துள்ள நிலையில் இதனால் படு காயங்கள் ஏற்பட்டிருப்பினும் சிறுமி உயிராபதிலிருந்து தப்பியுள்ளாள். நபர் ஒருவர் இந்த கொடூர நாயை வளர்த்துவந்துள்ளதுடன் அவருடைய வீட்டில் நேபாள் மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பவர் பணியாற்றிவந்துள்ளார். கடந்த 13 அன்று தன்னுடைய நான்கு வயது மகள் சானியா என்பவளை தன்னுடன் அழைத்து கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பிட் புல் வர்க்க நாய் சிறுமியை தாக்கியுள்ளது. சிறுமியின் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. சுனில் மற்றும் வீட்டார் உடனே சானியாவை மருத்துவமனையில் சேர்த்தும் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சுனில் மற்றும் சிறுமியின் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் புகார் பதிவு செய்ய சிறுமியின் தந்தை மறுத்துள்ளார். தன்னுடைய எஜமானே சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். ஒரு வேளை நான் புகார் அளித்தால் அவர் என் மகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டார். எனக்கு ஏன் மகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி இல்லை. இதனால் புகார் அளிக்கமாட்டேன் . எனக்கு ஏன் மகள் பிழைத்து வந்தால் போதும். என சிறுமியின் தந்தை கூறியுள்ளார். ஆனாலும் சஞ்சய்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .