பிணமாக மிதந்த தாய்,2 மகள்கள்- சாவில் சந்தேகம்

குடகு : டிசம்பர் . 4 – நீர் தேக்கத்தில் தாய் மற்றும் இரண்டு இளம்பெண்களின் உடல்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஸ்ரீமங்களா போலீஸ் சரகத்தில் உள்ள ஹைசூரு கிராமத்தில் நடந்துள்ளது. கூட்டியாலா அஷ்வினி (48) , நிகிதா (20) மற்றும் நவ்யா (18) ஆகியோர் இறந்துள்ளவர்கள். குடகு மாவட்டத்தில் கிராம அபிவிருத்தி சேவை மையத்தில் ஊழியராக பணியாற்றிவந்த அஷ்வினி தன்னுடைய இரண்டு மகள்களுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் தற்போது பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் சாவு தற்கொலையா அல்லது கால் இடறி நீரில் மூழ்கி இறந்தனரா அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து இதுவரை எதுவும்தெரிய வரவில்லை. அஷ்வினி தன இரண்டு மகள்களுடன் ஹுதிக்கேறியில் வசித்துவந்த நிலையில் நிகிதா கோணிக்கொப்பாவில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார் . நவ்யா கணினி பயிற்சி படித்துவந்தார். வீட்டிலிருந்து தாயும் இரண்டு மகள்களும் நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர். ஆனால் மாலை மூவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அஷ்வினியின் கணவன் மண்டியாவில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீமங்களா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உடல்கள் உடல்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்னர்தான் குஷால் நகர் தாலூகாவின் ஆனைக்காடு பகுதியில் நின்றிருந்த காரில் ஒரு முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா ஷிவல்லி கிராமத்தை சேர்ந்த முனைவர் சதீஷ் (47) என்பவர் இந்த சம்பவத்தில் இறந்தவர். இவர் மாநிலத்தில் கர்ப கலைப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக செய்திகள் கிளம்பியதில் விசாரணையில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.