
திருவனந்தபுரம்: நவம்பர். 3 – கேரள மாநில காவல் துறை தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, அழைப்பு வந்த நம்பரை காவல் துறை சோதனை செய்தது. போனில் பேசியது எர்ணாகுளத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் என்பது விசாரணையில் தெரியவந்தது. தவறுதலாக அழைப்பு விடுத்ததாக சிறுவனின் பெற்றொர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்து கேரள காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.