பிபிஎம்பி ஐடி பிரிவு ஊழியர்களுக்கு5 மாதங்களாக‌ ஊதியம் இல்லை

பெங்களூரு, அக். 21: பிபிஎம்பியின் ஐடி பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 38 ஊழியர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.
ஒப்பந்ததாரர்கள் மாற்றம், பணிகளில் ஏற்பட்ட குழப்பம் போன்ற காரணங்களால் ஐடி துறையில் பத்தாண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தவர்களுக்கு மே மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. கடந்த எட்டு ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் ஐடி பிரிவில் பணி செய்து வரும் ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். அப்படி பணியாற்றும் ஊழியர்களின் ஒப்பந்தம் நிகழாண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி காலாவதியானது. இந்த ஒப்பந்தத்தை கியோனிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்ததாரர் முந்தைய நிறுவனம் செலுத்தியதை விட குறைவாகவே ஊதியம் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஐடி ஊழியர்களுக்கு மே மாதம் முதல் ஊதியம் வழங்கவில்லை.
இதையெல்லாம் சரி செய்து தருவதாக ஐடி ஆலோசகர் நாகேஷ், சிறப்பு ஆணையர் ப்ரீத்தி கெலாட், நிர்வாக அதிகாரி ராகேஷ் சிங் ஆகியோர் கூறியும், வெள்ளிக்கிழமை மாலை வரை ஊதியம் வழங்கவில்லை என ஐடி பிரிவு ஊழியர்கள் தெரிவித்தனர்.ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் 10% உயர்த்தப்படும் என்று முந்தைய ஒப்பந்ததாரர் ஒப்புக்கொண்டார். ஆனால், இப்போது கியோனிக்ஸ் அமைப்பினர் எங்களுக்கு 10 முதல் 30 ஆயிரம் வரை ஊதியம் குறைவாக தருவதாகச் சொல்கிறார்கள். ஐடி ஆலோசகர் நாகேஷ் எல்லாவற்றையும் தாமதப்படுத்துகிறார் என்று ஊழியர்கள் குற்றம் சாட்டு
“புதிய ஒப்பந்ததாரர் சில ஊழியர்களை ஏற்காததால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். தொழிலாளர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என நீதிமன்றம் கூறியது. அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஆனால், பிபிஎம்பியால் ஒப்பந்த ஊழியர்களுக்கு நேரடியாக ஊதியம் வழங்க முடியாது. ஒப்பந்தம் போட்டால் தான் ஊதியம் வழங்கமுடியும். ‘உயர்நீதிமன்றம் ஆர்.எம்.எஸ்ஸுக்கு இணையாக ஊதியம் வழங்கச் சொன்னதால், அதை நிலுவைத் தொகையாகத் தர ஒப்புக் கொண்டுள்ளோம். புதிய ஒப்பந்ததாரருடன் ஊழியர்களை ஒப்பந்தம் போடச் சொன்னோம். தற்போது 27 பேர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். வருகைப்பதிவை கொண்டு வந்தால், ஊதியத்தை விடுவிப்போம் என்று பிபிஎம்பி ஐடி பிரிவு ஆலோசகர் நாகேஷ் தெரிவித்தார்.ஆணை வழங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கூடிய விரைவில் அதை தீர்த்து வைப்போம்” என்று பிபிஎம்பியி ஐடி பிரிவின் சிறப்பு ஆணையர் ப்ரீத்தி கெஹ்லாட் தெரிவித்தார்.