பிபிஎல் ரேஷன் கார்டு வைத்துள்ள பட்டியலின வகுப்பினருக்கு 75 யூனிட் இலவசம் மின்சாரம்

பெங்களூர் : செப்டம்பர் . 9 – மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பி பி எல் ரேஷன் அட்டைகளை பெற்றுள்ள பட்டியலின வகுப்பினருக்கு அளித்து வரும் மாதாந்திர 75 யூனிட் இலவச மின்விநியோக திட்டத்தை வாபஸ் பெற வில்லை என அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அரசு தெரிவிதிப்பதாவது , பி பி எல் குடும்ப ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு வீட்டு மின்சார பயன்பாடுகளான பாக்கிய ஜ்யோதி , குடீர ஜ்யோதி , பயனாளிகள் உட்படஇந்த குடும்பங்களுக்கு மாதத்திற்கு 75 யூனிட் வரை இலவச மின் விநியோக திட்டத்தை அரசுதொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. சில சமூக வலைதளங்கள் ,மற்றும் தினசரி பத்திரிகைகளில் இதற்க்கு எதிராக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் இது தொடர்பாக பின் தங்கிய வகுப்பினர் , மற்றும் பிரிவினர் குடும்பங்களுக்கு அம்ருத ஜ்யோதி தீட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 75 யூனிட்டுகள் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை திரும்ப பெறப்போவதில்லை . எனவே இது போன்ற வதந்திகளுக்கு செவி மடுக்க வேண்டாம் . இந்த திட்டம் தொடர்பாக மாநில அரசு கடந்த மாதம் ஆகஸ்ட் 22 அன்று பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை இ – ஆட்சிமுறை பிரிவு புறக்கணித்ததால் இதற்கான சுற்றறிக்கை இம்மாதம் மூன்றாம் தேதியன்று திரும்பபெறப்பட்டதே தவிர இந்த திட்டம் எவ்விதத்திலும் வாபஸ் பெற படவில்லை. பி பி எல் குடும்பத்தாரின் பட்டியலின குடும்பங்களுக்கு 75 யூனிட் வரை இலவச மின்சாரம் அளிக்கும் அம்ருத ஜ்யோதி மின் விநியோக திட்டத்தை மாநில அரசு 2022 மே 18 அன்று மாநிலம் முழுக்க நடைமுறை படுத்தியது. ஆனால் தற்போது இந்த திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என தவறான தகவல்கள் மக்களிடையே குழப்பத்தை உண்டாகியுள்ளது. தவிர அரசு இந்த திட்டத்தை மேலும் சிறப்பான முறையில் நடைமுறை படுத்த முயற்சித்து வருகிறது என்பதே உண்மை நிலை என தெரிவித்துள்ளது.