பிப்ரவரி 19ம் தேதி கர்நாடக பட்ஜெட்

ஹுப்பள்ளி, ஜன.11-
கர்நாடக மாநில பட்ஜெட் பிப்ரவரி 19 தாக்கல் செய்யப்பட உள்ளது என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் பசவராஜ் பொம்மை வரும் பிப்ரவரி 19ல் தாக்கல் செய்ய உள்ளார்.
இது அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட். நடப்பு பிஜேபி ஆட்சியின் கடைசி பட்ஜெட் தாக்கல் ஆகும்.
ஹுப்பள்ளியில் செய்தியாளரிடம் அவர் கூறுகையில், வரும் பிப்ரவரி 19 ல் மாநில பட்ஜெட்
தாக்கல் செய்யப்படும்
இது மாநிலத்தின் முழுமையான பட்ஜெட் தாக்கலாக அமைய உள்ளது. இதன் முன்னோட்டமாக நிதித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவமாக விவசாயிகள், கிராமிய தொழில் ,தண்ணீர் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவமாக உள்ளடங்கும். கடந்த பட்ஜெட்டில் 2.7 லட்சம் கோடி ரூபாய் அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.