பியூசி: 62 சதவீதம் பேர் தேர்ச்சி

Minister nagesh releasing the puc result at puc board malleswaram

பெங்களூர் : ஜூன். 18 – இந்தாண்டின் இரண்டாவது பி யு சி தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன் ஒட்டு மொத்தமாக 61.88 சதவிகித மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர் . வழக்கம்போல் இந்தாண்டும் மாணவியரே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  பட்ட கல்வி தேர்வு ஆணையம் இன்று நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் பி சி நாகேஷ் இரண்டாம் ஆண்டு பி யு தேர்வு முடிவுகள் குறித்து விவரங்கள் தெரிவிக்கையில் இந்த ஆண்டு  மொத்தமாக 6,83, 563 மாணவர்கள் தேர்வெழுதினர் . இவர்களில் 4,22,966 மாணவர்கள் தேர்ச்சிபெற்றிக்கும் நிலையில் 61.88 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலை பிரிவில் 48.71 சதவிகிதம் , விஞ்ஞான பிரிவில் 72.53 சதவிகிதம் , வர்த்தகம் பிரிவில் 64.97 சதவிகிதம் அளவிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையின் இரண்டாவது பி யு சி தேர்வுகள் முடிவுகளில் வழக்கம் போல் மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியரின் வெற்றி  68.72 சதவிகிதமாயிருக்கும் நிலையில் மாணவர்களின் தேர்ச்சி 55.22 சதவிகிதமாக உள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணி 81 மையங்களில் நடத்தப்பட்டது. தேர்வுகள் ஏப்ரல் 22 முதல் மே 18 வரை நடைபெற்றது . இந்த ஆண்டின் தேர்வு முடிவுகளில் கிராமந்தர பகுதி மக்களே அதிகளவில் வெற்றி பெற்றிருப்பதுடன் இந்த மாணவர்களின் தெறிச்சு விகிதம் 67.18 சதவிகிதமாக உள்ளது. நகர் பகுதி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 61.78 சதவிகிதமாகும். இந்த வருட முடிவுகளில் நல்ல மதிப்பெண்களின் அதாவது 85க்கும் அதிகமான மதிப்பெண்களை 91106 மாணவர்கள் பெற்றிருப்பதுடன் , முதல் வகுப்பு அதாவது 60 சதவிகிதத்திலிருந்து 85 சதவிகிதந்தை விட குறைவாக பெற்றவர்கள் 2,14,115 மாணவர்கள் . இரண்டாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அதாவது 60 சதவீதத்திற்கும் குறைவாக மற்றும் 50 சதவிகிதத்திற்கு அதிகமாக மதிப்பெண்களை பெட்ரா மாணவர்களின் எண்ணிக்கை 68444 மற்றும் மூன்றாம் வகுப்பில் அதாவது 50 சதவிகிதம் அளவிற்கு மதிப்பெண்பெற்றவர்களின் எண்ணிக்கை 49,301 பேறாகும். இந்தாண்டு இரண்டாம் பி யு சி தேர்வு முடிவுகளில் தக்ஷிண கன்னடா மாவட்டம் முதல் இடத்தில் இருப்பதுடன்  இந்த மாவட்டத்தில் 88.02 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உடுப்பி மாவட்டம் 86.38 சதவிகித தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தவிர 77.14 சதவிகித தேர்ச்சியில் விஜயபுரா மூன்றாவது இடத்தில் உள்ளது. 76.24 சதவிகித தேர்ச்சியில் பெங்களூரு தெற்கு நான்காவது இடத்திலும் கடைசி இடமாக சித்ரதுர்கா மாவட்டம் 56.80 சதவிகித வெற்றியை கண்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வில் கன்னடத்தில் 563 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் . ஆங்கிலத்தில் இரண்டு மாணவர்கள் நூற்றுக்கு நூறும் ஹிந்தியில் 124 மாணவர்களும் , மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் இவ்வாறு கல்வி துறை அமைச்சர் தெரிவித்தார்.