பிரகாஷ்ராஜின் சர்ச்சை பதிவு

பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்கள் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக மத்திய பாரதீய ஜனதா அரசையும், பிரதமர் நரேந்திரமோடியையும் கடுமையாக விமர்சிக்கிறார். இந்த நிலையில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், பிரகாஷ்ராஜும் சனாதனத்துக்கு எதிரான கருத்தை வெளியிட்டு உள்ளார். வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்துக்கள் தனாதனியர்கள் அல்ல. ஆனால் தனாதனிகள் மனிதர்களுக்கு எதிரானவர்கள்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
பெரியார், அம்பேத்கர் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அதோடு நாடாளுமன்ற திறப்பு விழாவில் நரேந்திரமோடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். பிரகாஷ்ராஜ் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்துகள் பதிவிட்டு வருகிறார்கள். இது வலைத்தளத்தில் பரபரப்பாகி உள்ளது.