பிரசாரத்தில் விமானம் ஹெலிகாப்டர்

மும்பை: ஏப்.18: மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி மே 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில், மும்பை புறநகர் துணை தேர்தல் அதிகாரி தேஜஸ் சாமெல் நேற்று அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘அரசியல் பிரமுகர்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அவற்றில் பயணம் செய்பவர்களின் விவரங்களை பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் அனுப்பலாம்.இந்த உத்தரவு மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பிறப்பிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.