பிரஜ்வலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் – மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடில்லி, மே 25-
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு மே 21ல் எழுதி இருந்த கடிதத்தில்
பிரஜ்வல் எம்.பி. யின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பேரில் மத்திய வெளியுறவுத்துறை பிரஜ்வலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பட்டது.
அதில் வெளிநாட்டுக்கு செல்ல என்ன காரணம்? தங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு எப்போது ஆஜராகிர்கள்?
தங்கள் பாஸ்போர்ட் ஏன் ரத்து செய்யக்கூடாது? உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது இது பாஸ்போர்ட் ரத்து செய்வதற்கான நடைமுறையில் முதல் கட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தரப்பில் பதில் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பாஸ்போர்ட் ரத்து செய்யும் பட்சத்தில் அவர் வெளிநாட்டில் இருக்க முடியாது.
தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பது விதிமுறை மேலும் அவர் தங்கி இருக்கும் நாட்டின் அரசு மூலம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்திய அரசு பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது பிரஜ்வல் ஜெர்மன் நாட்டில் இருப்பதாக தெரிகிறது. இதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாஸ்போர்ட் ரத்து தொடர்பாக நீதிமன்றம் அல்லது போலீஸ் நடவடிக்கை எடுக்க பாஸ்போர்ட் விதியின் கீழ் செயல் பட தொடங்கப் பட்டுள்ளது.
கர்நாடக அரசு மே 21 க்கு கடிதம் அனுப்பி இருந்தது. மே 23 ல் நடவடிக்கை எடுக்க துவங்கப்பட்டது என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.