பிரஜ்வல் குறித்து 196 நாடுகளுக்கு புகைப்படத்துடன் தகவல்

பெங்களூர் : மே. 8 – கைதாகும் பீதியில் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ப்ரஜ்வல் ரேவண்ணா குறித்து இன்டர்போல் அதிகாரிகள் உலகளாவிய வகையில் 196 நாடுகளுக்கு ப்ரஜ்வலின் புகைப்படத்துடன் தகவல் அனுப்பியுள்ளனர்.
இது வெளிநாட்டில் ஒளிந்திருக்கும் ப்ரஜ்வலுக்கு மேலும் சிக்கல் தருவதாகும். பாலியல் குற்ற விடியோக்கள் பகிரங்கமான உடனேயே ப்ரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதுடன் இதனால் சிறப்பு விசாரணை குழு (எஸ் ஐ டி) அதிகாரிகள் அவரை கண்டு பிடிக்க சி பி ஐ மற்றும் இன்டர்போல் உதவியை நாடினர். இதற்க்கு முழு அளவில் ஒப்புக்கொண்ட இன்டர்போல் தற்போது ப்ரஜ்வல் ரேவண்ணாவை கண்டுபிடிக்க ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இது குறித்து ஹெச் டி குமாரசாமி கூறுகையில் ஹாசன் நகரம் முழுக்க சுமார் 25 ஆயிரம் பென்ட்ரைவ்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. புகார் பதிவான பிறகும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் பொறுப்பு அதிகாரி ஆகியோர் ப்ரஜ்வலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் அரசு மற்றும் அதிகாரிகள் மௌனம் சாதித்து வருகின்றனர். என ஹெச் டி குமாரசாமி குற்றங்சாட்டியுள்ளார். பென்ட்ரைவின் மூலம் மற்றும் ராஜேகௌடாவின் குற்றச்சாட்டுகள் குறித்தும் எஸ் ஐ டி யினர் கவனம் செலுத்தி வருகின்றனர். பென்ட்ரைவ் விநியோகத்தில் ஒரு வேளை துணை முதல்வர் டி கே சிவகுமார் பங்கு இருந்தால் அது எஸ் ஐ டி விசாரணை வாயிலாக தெரியவரும். மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.மாநில அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள ப்ரஜ்வல் ரேவண்ணா பென்ட்ரைவ் விவகாரம் நாளொரு திருப்பததை பெற்று வருகிறது.
இந்த விவகாரத்தின் வீடியோ கசிவு விவகாரமும் இப்போது பரபரப்பாகியுள்ளது பெண்களின் விடீயோக்களை பென்ட்ரைவ்களில் நிரப்பி அங்கங்கு விநியோகித்துள்ளது குறித்து விவாதங்கள் துவங்கியுள்ள நிலையில் இந்த விவகார சூறாவளியில் பலரை பென்ட்ரைவ் பக்கமாக இழுத்து வருகிறது. மாநிலத்தில் பொது தேர்தல்கள் முடிந்தபின்னரும் இந்த வீடியோ விவகாரம் பல்வேறு திருப்பங்கள் பெற்று இன்னும் விரிந்துகொண்டே போகிறது. இந்த விவகாரம் குறித்து துணை முதல்வர் டி கே சிவகுமாருக்கு சொந்தமானது என கூறப்பட்ட ஆடியோ பதிவை வழக்கறிஞரான பாரதீய ஜனதா பிரமுகர் தேவராஜே கௌடா வெளியிட்ட உடனேயே முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். வீடியோ கசிவின் முக்கியபுள்ளி டி கே சிவகுமார் என குமாரசாமி நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். கட்சியின் அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர் கூட்டம் நடத்திய குமாரசாமி வீடியோ கசிவு விவகாரத்தில் நேரடியாக தொடர்புள்ள துணை முதல்வர் டி கே சிவகுமாரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும். பெண்களின் விடீயோக்களை பென்ட்ரைவ்களில் நிரப்பி வீதிகளில் கொட்டிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். ப்ரஜ்வல் ரேவண்ணா பென்ட்ரைவ் விவகாரத்தை விசாரணை நடத்திவருவது சிறப்பு விசாரணை குழு அல்ல . அது சித்தராமையா சிவகுமார் விசாரணை குழு. இந்த இரண்டு பேரின் அழுத்தத்தால் எஸ் ஐ டி சிக்கிக்கொண்டுள்ளது