பிரஜ்வல் பாஸ்போர்ட் விவகாரம்- மத்திய அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு

பெங்களூர், மே 23- பாராளுமன்ற உறுப்பினர் ப்ரஜ்வால் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பினும் இது வரை இதற்க்கு மத்திய அரசு ஒப்பவில்லை என மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் புகார் தெரிவித்துள்ளார். இந்த விஷயமாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். தவிர சிறப்பு விசாரணை குழு (எஸ் ஐ டி ) வும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் எவ்வித பதிலும் இதுவரை வரவில்லை. என பரமேஸ்வர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் மத்திய அரசு சட்டவிதிகளுக்குட்பட்டு உதவ வேண்டும். வெறும் குற்றம் சாட்டினால் உபயோகம் இல்லை. ப்ரஜ்வாளுக்கு எதிராக வாரென்ட் பிறப்பித்திருப்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். வாரென்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னர் பாஸ்போர்ட்டை ரத்து செய்வது மத்திய அரசின் கடமை. ஹெச் டி குமாரசாமி ஒவ்வொரு விஷயத்திற்கும் பேசுகிறார். சட்ட முறைப்படி எஸ் ஐ டி என்னவெல்லாம் பணியாற்றவேண்டுமோ அனைத்தையும் செய்து வருகிறது. குமாரசாமி விசாரணை இப்படி நடக்கவேண்டும் அப்படி செய்யவேண்டும் என கூறியது போல் தெரிகிறது. மாநிலத்தில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. என பிஜேபி கூறிவருவதை ஏற்க முடியாது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்பதை நான் மற்றும் முதல்வர் இருவரும் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளோம். யார் காலத்தில் கொலைகள் அதிகம் நடந்தன எர்ன்பதற்கு புள்ளி விவரங்கள் உள்ளன. அதற்க்கு பிஜேபியினர் முதலில் பதில் அளிக்கட்டும். தனியார் துறைகளில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல நாட்களாகவே வற்புறுத்தியவர்கள் நாங்கள். லட்சக்கணக்கான பதவிகளுக்கு யாருக்கும் தெரியாமல் ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதுடன் ஒதுக்கீடு முறையில் முறைகள் கடைபிடிக்கப்படவில்லை. இவ்வாறு உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் தெரிவித்தார்.